மகனின் நண்பர்கள் என நினைத்து உணவு பரிமாறிய முதியவருக்கு அதிர்ச்சி - கத்தி முனையில் 20 சவரன் நகை கொள்ளை
சேலம், 19 ஜூலை (ஹி.ச.) சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்த பகுதியில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளுக்குள் நேற்று இரவு ஹெல்மெட் அணிந்து முகமூடி அணிந்திருந்த ஏழு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் புகுந்துள்ளது. வீட்டில் இருந்தவர்களை கத்தியைக் காட்டி ம
மகனின் நண்பர்கள் என நினைத்து உணவு பரிமாறிய முதியவருக்கு அதிர்ச்சி - கத்தி  முனையில் 20 சவரன் நகை கொள்ளை


சேலம், 19 ஜூலை (ஹி.ச.)

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்த பகுதியில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளுக்குள் நேற்று இரவு ஹெல்மெட் அணிந்து முகமூடி அணிந்திருந்த ஏழு பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் புகுந்துள்ளது.

வீட்டில் இருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த கும்பல், அங்கிருந்தவர்களிடம் இருந்து சுமார் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 1.5 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில் நெகிழ்ச்சியான ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. கொள்ளையடிக்க வந்தவர்களை தனது மகனின் நண்பர்கள் என தவறாக நினைத்துக் கொண்ட முதியவர் ஒருவர், அவர்களை வீட்டிற்குள் அழைத்து அன்புடன் உணவு பரிமாறியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகே அவர்கள் கொள்ளையர்கள் என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அப்போது அந்த முதியவர் கண்ணீருடன் கெஞ்சி கேட்டுக்கொண்டதால், மனம் இரங்கிய கொள்ளைக் கும்பல் அவரது தாலிக்கொடியை மட்டும் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

மற்ற நகைகள் மற்றும் பணம் அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு அந்த ஏழு பேர் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b