நாகையில் 43,600 ஏக்கர் குறுவை சாகுபடி கடும் பாதிப்பு - வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை
நாகை, 19 ஜூலை (ஹி.ச) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக நாகை டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு போத
நாகையில் 43,600 ஏக்கர் குறுவை சாகுபடி கடும் பாதிப்பு - வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை


நாகை, 19 ஜூலை (ஹி.ச)

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக நாகை டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு போதிய நீர்வரத்து இல்லாததால் ஜூலை 12-ஆம் தேதி ஆகியும் அணை திறக்கப்படவில்லை. இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 43,600 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படவிருந்த குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் நீர்வரத்து குறைந்ததாலும் டெல்டா விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக விதை, உரம் வாங்கி நிலங்களை தயார் செய்து வைத்திருந்த விவசாயிகள், தண்ணீர் வராததால் விதைப்பு பணிகளை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே விதைத்த சில இடங்களில் பயிர்கள் கருகி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு நாகை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், குறுவை சாகுபடி பாதிப்பால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு முழு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்குவதோடு, உரிய இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b