பவன் கல்யாணை சந்தித்து நலம் விசாரித்த நாரா லோகேஷ்
ஹைதராபாத் , 19 ஜூலை (ஹி.ச.) ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுக்கு கடந்த சில காலமாக தோள்பட்டை காயம் காரணமாக சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து, சமீபத்தில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அவரது வலது தோள்பட்டைக்கு அறுவை சிகிச
A


ஹைதராபாத் , 19 ஜூலை (ஹி.ச.)

ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி

பவன் கல்யாணுக்கு கடந்த சில காலமாக தோள்பட்டை காயம் காரணமாக சிரமம் இருந்து வந்தது.

இதையடுத்து, சமீபத்தில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அவரது வலது தோள்பட்டைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் பவன் கல்யாண் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது இல்லத்துக்கு சென்ற நாரா லோகேஷ், பவன் கல்யாணின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பான விவரங்களையும் கேட்டார்.

மருத்துவர்களின் ஆலோசனைகளை முறையாக பின்பற்றி முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று பவன் கல்யாணிடம் நாரா லோகேஷ் அறிவுறுத்தினார்.

அவர் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து நாரா லோகேஷ் தனது அறிக்கையில் கூறியதாவது,

துணை முதல்-மந்திரி பவன் கல்யாணை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் விரைவில் குணமடைந்து வழக்கமான பணிகளுக்கு திரும்ப வேண்டும் என வாழ்த்துகிறேன்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி தேவையான ஓய்வு எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

பவன் கல்யாண் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருக்கும் நிலையில், அவரை அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA