Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜூலை (ஹி.ச.)
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக மத்திய அரசு டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று நடத்தியது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்து புதிய அரசியல் அமைப்பாக செயல்பட்டு வரும் 20 எம்.பி.க்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அந்த எம்.பி.க்களை தனி குழுவாக அங்கீகரித்து அழைத்தது ஏற்க முடியாதது எனக் கூறி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இதனால், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் முன்பே ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ளது.
நீட் விவகாரம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த வெளிநடப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P