Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 19 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதை அடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் தடை செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் வடசேரி பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ஷாகின்ஹான் என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் இருந்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த போதைப்பொருளை அவர் எங்கிருந்து வாங்கி வந்தார், யாருக்கெல்லாம் விற்பனை செய்தார், இதன் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b