72-வது தேசிய விருது வென்ற அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
சென்னை, 19 ஜூலை (ஹி.ச.) 72-வது தேசிய விருது வென்ற அனைவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, 72-வது தேசிய விருது பெறு
72-வது தேசிய  விருது வென்ற அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து


சென்னை, 19 ஜூலை (ஹி.ச.)

72-வது தேசிய விருது வென்ற அனைவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

72-வது தேசிய விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. தனுஷ் அவர்கள் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படக் குழுவினருக்கும்,

தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள சத்யஜோதி நிறுவன தயாரிப்பில், திரு.

அருணமாதேஸ்வரன் அவர்கள் இயக்கத்தில், திரு. தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படக்குழுவினருக்கும்,

கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. தனுஷ் அவர்களுக்கும்,

அமரன் திரைப்படத்திற்காக பின்னணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. ஜி.வி பிரகாஷ் அவர்களுக்கும்,

அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு.

ராஜ்குமார் அவர்களுக்கும்,

அமரன் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. கலைவாணன் அவர்களுக்கும்,

மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ள செல்வி. சாச்சனா நமிதாஸ் அவர்களுக்கும்,

மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. அனல் அரசு அவர்களுக்கும்,

மெய்யழகன் திரைப்படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. சுரேன் G அவர்களுக்கும்,

Non-Feature Films பிரிவில் புளூ படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு. TS ஹரிஹரசுதன் அவர்களுக்கும்

விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களின் கலைச் சேவை மக்களை மென்மேலும் மகிழ்வித்து, தாங்கள் இன்னும் பல அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b