Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 19 ஜூலை (ஹி.ச)
முட்டை உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக விளங்கும் நாமக்கல்லில், பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து ரூபாய் 6.80 ஆக நீடித்து வருகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலம் இந்த விலையை நிர்ணயித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே விலை ஏற்ற இறக்கமின்றி நிலையாக இருந்து வருவது பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு முட்டையின் விலை ரூபாய் 7.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து செலவு மற்றும் கையாளுதல் கட்டணம் காரணமாக நாமக்கல் பண்ணை விலையை விட சென்னையில் விலை சற்று அதிகமாக உள்ளது.
மறுபுறம் நாமக்கல் பகுதியில் கறிக்கோழி விலை உயர்ந்துள்ளது. உயிருடன் உள்ள கறிக்கோழி ஒரு கிலோவுக்கு ரூபாய் 3 உயர்த்தப்பட்டு தற்போது ரூபாய் 148-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கறிக்கோழிக்கான தேவை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b