Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 19 ஜூலை (ஹி.ச.)
ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றி கழக (தவெக) எம்.எல்.ஏ. இளையராஜா, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கக் கோரி, தொலைபேசி மூலம் பணம் கொடுப்பதாக சிலர் பேரம் பேசியதாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள பாரி நகர் பகுதியில் கனகராஜுக்கு சொந்தமான பைனான்ஸ் அலுவலகத்தில் நேற்று இரவு கரூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனை நிறைவடைந்த பின்னர், அலுவலகத்தில் இருந்த சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, அந்த அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துச் சென்றனர்.
இந்த சோதனையில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P