Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 19 ஜூலை (ஹி.ச)
சேலம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக காவிரியில் நீர்வரத்து கூடியுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 30 கன அடியில் இருந்து 42 கன அடியாக உயர்ந்துள்ளது.
இருப்பினும் அணையின் நீர்மட்டம் சிறிது சரிவைக் கண்டுள்ளது.
நேற்று 75.03 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 74.92 அடியாக குறைந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 37.08 டி.எம்.சி. ஆக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் நீர்மட்டத்தில் சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வருவது விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b