காஷ்மீரில் கனமழை - 5 பேர் மாயம் , 4 பேர் பலி..!
ஸ்ரீநகர் , 19 ஜூலை (ஹி.ச.) ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் அடி
A


ஸ்ரீநகர் , 19 ஜூலை (ஹி.ச.)

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், சில வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் மாயமாகியுள்ளனர்.

அவர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், ஆற்றங்கரையோரம் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA