ஆடி மாதம் முதல் ஞாயிறன்று மீன்களின் விலை காசிமேடு மார்க்கெட்டில் உயர்வு
சென்னை, 19 ஜூலை (ஹி.ச.) சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த மூன்று வாரங்களாக ஒரு சிலரின் விசைப்படகுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வரும் நிலையில் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. குறிப்பாக சிறிய வகை மீன்கள
Kasimedu Fish Market


சென்னை, 19 ஜூலை (ஹி.ச.)

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த மூன்று வாரங்களாக ஒரு சிலரின் விசைப்படகுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வரும் நிலையில் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

குறிப்பாக சிறிய வகை மீன்கள் வரத்து அதிகமாக உள்ள நிலையில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று மீன் பிரியர்கள் அதிகாலை முதலிலேயே தேவையான மீன்களை வாங்குவதற்கு வந்திருந்த நிலையில் வரத்து குறைவினால் மீன்களின் விலை ஏற்றமாகவே காணப்படுகிறது.

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக சில்லறை விற்பனை கடைகளும் குறைவாகவே காணப்பட்டு வருகின்றன.

பெரியவகை மீன்களின் விலை ஏற்றம் காரணமாக சிறிய வகை மீன்களையே மீன் பிரியர்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.

விசைப்படகுகளில் இருந்து இறக்கப்படும் மீன்களை உணவகங்களுக்கும், ஏற்றுமதி செய்வதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர் இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் மார்க்கெட்களுக்கு மீன்களை வாங்கி செல்பவர்கள் கூடை கூடையாக சிறிய வகை மீன்களையே வாங்கி செல்கின்றனர்.

பல்வேறு வகை மீன்களும் அவற்றின் விலை நிலவரமும் (ரூபாயில்)

வஞ்சிரம் - 1100

கொடுவா - 900

தேங்காய் பாறை - 800

ஷீலா - 800

பால் சுறா - 800

சங்கரா - 500

பாறை - 400

இறால் - 400

நண்டு -300

நவரை -300

பண்ணா-300

காணங்கத்தை -300

கடுமா- 300

நெத்திலி -200

Hindusthan Samachar / ANANDHAN