Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 19 ஜூலை (ஹி.ச.)
23-வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது.
உலகின் முன்னணி அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இதையடுத்து, அர்ஜென்டினா-ஸ்பெயின் அணிகள் மோதும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கேரள மாநிலத்தில் கால்பந்துக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில், நள்ளிரவு நேரத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியை பார்த்துவிட்டு மாணவர்கள் ஓய்வெடுக்கும் வகையில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு மாநில கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி மீதான கேரள மக்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ள கேரளத்தில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் உற்சாகமாக போட்டியை காண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA