காமராஜர் மாடல் அரசை முதல்வர் விஜய் தொடங்கி இருக்கிறார் - மாணிக்கம் தாகூர்
மதுரை, 19 ஜூலை (ஹி.ச.) மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ் வி என் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் மைதானத்தில் 2,500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து காமர
Manickam Tagore


மதுரை, 19 ஜூலை (ஹி.ச.)

மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ் வி என் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் மைதானத்தில் 2,500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து காமராஜரின் உருவம் தெரியும் வண்ணம் நின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் பேசும் போது,

வெயிலில் நின்று கொண்டிருக்கிறீர்கள் விட்டமின் டி உங்களுக்கு நன்றாக கிடைக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கல்வி போன்றவற்றில் முக்கிய முயற்சி எடுத்தார்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மாடல் அரசை யாராலும் கொண்டு வர முடியவில்லை தற்பொழுது முதல்வர் விஜய் அவர்கள் அதை தொடங்கி இருக்கிறார். அது நல்ல துவக்கம் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறது. நேர்மையான ஆட்சியாக வழங்குவார் வழங்க முயற்சிக்கிறார்.

அதற்காக விழாவிற்கு வந்த முன்னாள் நீதி அமைச்சர் காங்கிரஸ் கட்சியின் காரிய கமட்டி உறுப்பினர் சிதம்பரம் அவர்களுக்கும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN