ஜாதி ரீதியான மோதலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் - மாவட்ட எஸ்பி எச்சரிக்கை
மதுரை, 19 ஜூலை (ஹி.ச.) மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் அதிகாலை 3 மணியளவில் பட்டியலின இளைஞர்கள் இருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மாற்று சமுதாய இளைஞர்கள் மூன்று நபர்கள் அவர்களை அச்சுறுத்தி பின் தொடர
Maduria


மதுரை, 19 ஜூலை (ஹி.ச.)

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் அதிகாலை 3 மணியளவில் பட்டியலின இளைஞர்கள் இருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மாற்று சமுதாய இளைஞர்கள் மூன்று நபர்கள் அவர்களை அச்சுறுத்தி பின் தொடர்ந்து சென்று தாக்க முற்பட்ட போது, அங்கு படுத்திருந்த முதியவரான சுப்பன் 70 என்பவரை ஆயுதத்தால் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்

மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளின் ஓடுகளை சேதப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் மற்றும் மதுரை எஸ்பி தேவநாதன் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காயம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த ராமர் (26), லட்சுமன் (26), பிரவீன் (34), ஆகிய 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜாதி ரீதியான மோதலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN