Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிராமி தமிழி கல்வெட்டுகள் மற்றும் பழமையான கல்வெட்டு எழுத்துக்களை, தமிழ் வளர்ச்சி மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மலைப்பகுதியில் உள்ள சமணர் படுகைகளையும் அமைச்சர் பார்வையிட்டார். அங்குள்ள கற்படுக்கையில் படுத்து அதன் அமைப்பு மற்றும் வரலாற்றுப் பின்னணி குறித்தும் அறிந்துகொண்டார்.
பின்னர், தொல்லியல் துறை அதிகாரிகளிடம் கல்வெட்டுகளின் காலக்கட்டம், வரலாற்று முக்கியத்துவம், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசின் ஐஏஎஸ் அதிகாரி ஜெயசீலன், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P