Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 19 ஜூலை (ஹி.ச.)
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டார்.
இந்தப் பயணம், இந்தியாவின் ஐரோப்பிய நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பயணத்தின் முதல் கட்டமாக, ஜூலை 20-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு மால்டோவாவுக்கு செல்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வடக்கு மாசிடோனியாவில் அரசுமுறை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பின்னர் ஜூலை 23 முதல் 25-ந் தேதி வரை ருமேனியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
தனது மூன்று நாடுகளுக்கான பயணத்தை ஜூலை 25-ந் தேதி நிறைவு செய்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியா திரும்புகிறார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA