Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 19 ஜூலை (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு கோடை குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் கடுமையாக சரிந்துள்ளது.
இந்த ஆண்டு 87,956 மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் குறைவாகும்.
கடந்த ஆண்டு கோடை குறுவை பருவத்தில் மாவட்டத்தில் 1.88 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஆண்டு பருவமழை பற்றாக்குறை மற்றும் காவிரி நீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரும்பாலும் ஆழ்துளை கிணற்று நீரை நம்பி சாகுபடி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்தது.
இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 31,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே கோடை குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் 178 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆழ்துளை கிணற்று பாசனத்தை நம்பி சாகுபடி செய்ததால் உற்பத்தி செலவு அதிகரித்ததுடன், மகசூலும் எதிர்பார்த அளவு கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொள்முதல் அளவு ஒரு லட்சம் டன் வரை குறைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b