Enter your Email Address to subscribe to our newsletters

ஹராரே , 19 ஜூலை (ஹி.ச.)
வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் (டி20) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரையும் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை தனதாக்கியது.
இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில், ஜிம்பாப்வே–வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் போட்டி என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக முழு வீச்சில் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA