திருத்தணியில் மெக்கானிக் மீது கொலை முயற்சி – மிளகாய்த்தூள் தூவி சரமாரி வெட்டு
திருவள்ளூர், 19 ஜூலை (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையம் அருகே, இருசக்கர வாகன மெக்கானிக் ஒருவரின் கண்ணில் மிளகாய்த்தூள் தூவி, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி ஜெ.ஜெ.
கொலை


திருவள்ளூர், 19 ஜூலை (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையம் அருகே, இருசக்கர வாகன மெக்கானிக் ஒருவரின் கண்ணில் மிளகாய்த்தூள் தூவி, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (35), திருத்தணியில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், திருத்தணி காவல் நிலையம் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் அவரது கண்ணில் மிளகாய்த்தூள் தூவியதுடன், தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த தமிழரசனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் தமிழரசனை திருத்தணி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருத்தணி காவல் நிலையம் அருகே நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam