Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 ஜூலை (ஹி.ச.)
கோவை மாவட்டம் வால்பாறை கோஆப்ரெட்டிவ் காலனியை சேர்ந்த லீலா சுலோக்ஷனா வயது (89) என்ற மூதாட்டி வீட்டில் வைத்திருந்த நகை 20 பவுன், பணம் ரூபாய் 60 ஆயிரத்தை அவருடைய சொந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சக்தி குமார் என்பவர் திருடியதாக மூதாட்டி புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் வால்பாறை காவல்துறையினர் இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டையில் காவல்துறையின் வலையில் சிக்கிய சக்தி குமாரை விசாரணை மேற்கொண்டதில் 20 பவுன் நகையும் ரூபாய் 60,000 ரொக்க பணத்தையும் கைப்பற்றி அவர் மீது வழக்குப்பதிவு செய்து சக்தி குமாரை வால்பாறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்களிடம் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேலும் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் குடியிருந்து வரும் உதயகுமார் என்பவருடைய மகன் நிதிஷ்குமார் வயது (26) என்பவரை ஏமாற்றி ஆசை வார்த்தை கூறி வீட்டில் இருந்த பீரோவில் தங்க நகை 20 பவுனை திருடிச் சென்ற புகார் கொடுக்கப்பட்டதன் பேரில் இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்பட சதித்திட்டம் தீட்டி நகையை கொள்ளையடித்தனர்.
இதில் முதல் குற்றவாளி துர்கா தேவி வயது (26) க/ பெ அப்துல், ஆஸ்கர் அலி த/ பெ. உபைததுல்லா, துளசிமணி த/பெ பரமசிவம் வயது 30 ஆகியோர் நித்திஷ் குமாருடன், நெருங்கிய நண்பர்களாக பழகி, அவரை ஏமாற்றி இருபது பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளார்.
மேலும் நித்திஷ் குமாருடைய தாய், தந்தையர் ஊருக்குச் சென்று இருந்த காரணத்தினால், நகை பற்றி எந்தவித சலனமும் இன்றி இருந்துள்ளனர்.
திடீரென நித்திஷ் குமாரின் தாயார் பீரோவை திறந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 பவுன் நகை காணாமல் போய்விட்டது. உடனடியாக வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், வால்பாறை காவல்துறையினர் இரண்டு குழுவாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, அவர்களை கண்டறிந்து கைது செய்தனர்.
மூவரையும் வால்பாறை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு விசாரணையில் நகைதிருட்டைஒப்புக் கொண்டதால், அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களைவால்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். துர்கா தேவியும் துளசி மணியும் உடன் பிறந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN