த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் மேலும் இருவர் கைது - ரூ.2.82 கோடி ரொக்கம் பறிமுதல்
சென்னை, 19 ஜூலை (ஹி.ச) தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஐ.பி.டி.எஸ். நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு உள
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் மேலும் இருவர் கைது - ரூ.2.82 கோடி ரொக்கம் பறிமுதல்


சென்னை, 19 ஜூலை (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே ஐ.பி.டி.எஸ். நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கைது எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கொரட்டூரைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து தீபம் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பெயரில் பணப் பரிவர்த்தனைகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ரூ.2.82 கோடி ரொக்கப் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தப் பணம் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசுவதற்காக கொண்டு வரப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் முறைகேடான பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b