தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 62% மாணவர் சேர்க்கை நிறைவு - முதுகலை விண்ணப்பம் ஜூலை 31 வரை நீடிப்பு
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் மொத்தமுள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்
tamilaga arasu kalai, ariviyal kallurigalil 62% maanavar serkkai niraivu 64 62% of student admissions completed


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மாநிலத்தில் மொத்தமுள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்காக 1,26,959 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 78,827 இடங்கள் நிரம்பியுள்ளன.

இது மொத்த இடங்களில் 62 சதவீதமாகும்.

மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கை நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியுள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை முதுகலை படிப்புகளுக்கு 12,528 பேர் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 7,853 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை இறுதி செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இளநிலை சேர்க்கை நிறைவடையும் சூழலில், முதுகலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Hindusthan Samachar / vidya.b