Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச)
திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், ஒரே பொய்யை திரும்பத் திரும்ப கூறுவதால் அது உண்மையாகிவிடாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல், சட்டமன்றத்தில் மைனாரிட்டி அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நாள் வரை, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி யாரிடமாவது கூறியிருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அதிமுக என்ற வாழவைத்த இயக்கத்திற்கு விசுவாசமாக இல்லாமல், தங்களை பாதுகாத்துக்கொள்ள மாற்றுக் கட்சிக்கு சென்றவர்களுக்கு, தக்க நேரத்தில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ