Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 02 ஜூலை (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவிலில் 80 ஆயிரத்து 167 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 28 ஆயிரத்து 270 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
அன்றைய தினம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.4 கோடியே 96 லட்சமாக பதிவானது.
மேலும், பக்தர்களுக்கு 4.10 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
அன்னபிரசாதம் 1.97 லட்சம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
பக்தர்களின் தொடர் வருகையால் திருமலையில் எப்போதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தரிசனத்துக்காக இலவச வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA