Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 02 ஜூலை (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், இன்று காலை திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக கோவிலுக்குள் சென்ற அவரை, திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) தலைவர் பி.ஆர். நாயுடு, செயல் அலுவலர் முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அலுவலர் சி.எச். வெங்கையா சௌதரி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பாரம்பரிய கோவில் மரியாதையுடன் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, நாரா லோகேஷ் திருப்பாவாடை சேவையில் பங்கேற்று, ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, சுவாமியின் அருளாசியைப் பெற்றார்.
பின்னர் ரங்கநாயக்கர் மண்டபத்தில் வேதப் பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசீர்வாதம் வழங்கினர். தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் போஜ்ஜல சுதீர் ரெட்டி, புலிவர்த்தி நானி, காளி பானுபிரகாஷ், வேமிரெட்டி பிரசாந்த் ரெட்டி, ஷாப் தலைவர் அனிமினி ரவி நாயுடு, திருப்பதி மாவட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் பணபாக லட்சுமி, ஆந்திரப் பிரதேச கிரீனிங் அண்ட் பியூட்டிபிகேஷன் கார்ப்பரேஷன் தலைவர் சுகுணம்மா, TUDA தலைவர் டாலர்ஸ் திவாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA