நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரம் - முதல்வர் விஜய் இன்று துறைவாரியாக ஆலோசனை
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) தமிழக அரசின் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கியத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அரசின் வருவாய், செ
நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் தீவிரம் - முதல்வர் விஜய் இன்று துறைவாரியாக ஆலோசனை


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

தமிழக அரசின் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கியத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அரசின் வருவாய், செலவினங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை கூட்டுறவுத்துறையின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

விவசாயக் கடன்கள், பயிர்க்காப்பீடு, கூட்டுறவு சங்கங்களின் நிதிநிலை மற்றும் வரும் ஆண்டிற்கான கூட்டுறவுத்துறை திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மாலையில் உணவுத்துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். பொது விநியோகத் திட்டம், ரேஷன் பொருட்களின் கொள்முதல், இருப்பு நிலவரம், விலைவாசி கட்டுப்பாடு மற்றும் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

நிதித்துறை அமைச்சர், துறைச் செயலாளர்கள் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அமையும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்த நாட்களில் மற்ற முக்கியத் துறைகளுடனும் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b