Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இன்றைய கூட்டத்தில் அமைச்சர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், மாவட்ட அளவிலான பிரச்சினைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட தலைவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முக்கிய மாவட்ட தலைவர்கள் கூட்டம் என்பதால், இது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / vidya.b