தமிழகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) தமிழக பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் மட்டத்தில் பெரிய அளவிலான பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கிருஷ்ண பிரியா தற்போது கோவை மாவட்ட முதன்மை கல்வி
Education officials in Tamil Nadu are being transferred


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் மட்டத்தில் பெரிய அளவிலான பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கிருஷ்ண பிரியா தற்போது கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக, திண்டுக்கல் மாவட்டத்தில் சிஇஓவாக பணியாற்றிய உஷா திருச்சி மாவட்டத்தின் புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

பதவி உயர்வு பெற்றவர்கள் :

டி.எஸ்.மகாலட்சுமி-முதன்மைக் கல்வி அலுவலர், கடலூர் (மாவட்டக் கல்வி அலுவலர், செங்கல்பட்டு),

இ.முருகன்-முதன்மைக் கல்வி அலுவலர், தேனி (மாவட்டக் கல்வி அலுவலர், வில்லிவாக்கம், சென்னை வடக்கு),

எஸ்.கே.இரவிச்சந்திரன்-துணை இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம்,

சென்னை (உதவி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை),

எம்.செல்வகுமார் முதன்மைக் கல்வி அலுவலர், திண்டுக்கல் (மாவட்டக் கல்வி அலுவலர், பெரம்பலூர்)

முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்:

ர.பாலமுரளி- விழுப்புரம் (கோவை),

ஆர்.அறிவழகன்- திருவள்ளூர் (விழுப்புரம்),

ப.உஷா-திருச்சி (திண்டுக்கல்),

கே.கிருஷ்ணபிரியா- கோவை (திருச்சி),

பி.மகேஸ்வரி- துணை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்,

சென்னை (முதன்மைக் கல்வி அலுவலர், சேலம்),

ஆ.எல்லப்பன்- சேலம் (செயலர், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை).

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக நலன் கருதி இந்த இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் விரைவில் தங்கள் பணியிடங்களில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b