Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)
ஆர்.எஸ்.பாரதி புகார் மனு மீது வழக்கு பதிவு செய்ய என்ன தயக்கம்? என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் சபாநாயகர் அப்பாவு
இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில்,
தேர்தல் முடிவுகள் மே மாதம் 4 தேதி முடிவடைந்த இரவே திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பனையூருக்கு அழைத்து வந்து த.வெ.க கூட்டணியில் சேர்த்தவர் இன்றைய முதல்வர்.
தொடர்ந்து பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற அதிமுகழக எம்.எல்.ஏ-களில் 25 பேர்களை கட்சியை தகர்த்து தனக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தவர்.
அதேபோல் அமமுக தலைமைக்கு தெரியாமல் காமராஜ் எம்எல்ஏ கொள்முதல் செய்யப்பட்டு த.வெ.க-விற்கு ஆதரவாக வாக்களித்தார்.
இன்று வரை பல அதிமுகழக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முதல்வரை சந்தித்த பின், பத்திரிகையாளர் சந்திப்பில்
உங்களது 2 எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்ய சொல்லுங்கள் இடைத்தேர்தலில் நானே பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்வேன் என்று வாக்கு மூலம் தந்தார்.
அதனடிப்படையில் திமுக எம்.எல்.ஏக்களை த.வெ.க-விற்கு ஆதரவாக ராஜினாமா செய்ய சொன்ன முதல்வர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் திமுக கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் புகார் மனு கொடுத்துள்ளார்.
இத்தனை குற்றங்களையும் கைகட்டி வேடிக்கை பார்த்த தமிழக காவல்துறை, ஊத்தங்கரை இளையராஜா எம்எல்ஏ-விடம்
போலியான புகார் மனு பெற்று திமுக-வின் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமா?
இது போல் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பீர்களா? ஆர்.எஸ்.பாரதி புகார் மனு மீது வழக்கு பதிவு செய்ய என்ன தயக்கம்? தற்போது தமிழகத்தில் செயல்படுவது தமிழக காவல்துறையா? அல்லது த.வெ.க காவல்துறையா? என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN