Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)
ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளான நேற்று அதிரடியாக குறைந்தது.
நேற்று முன் தினம் காலை மாலை என 2 வேளையும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டது.
நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250க்கும் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும்
(ஜூலை 2) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,400க்கும் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P