தேனி அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
தேனி, 02 ஜூலை (ஹி.ச.) கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பிராஜ் உட்பட நான்கு பேர் மருத்துவ சிகிச்சைக்காக காரில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேனி - மதுரை தேசிய
தேனி அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்


தேனி, 02 ஜூலை (ஹி.ச.)

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பிராஜ் உட்பட நான்கு பேர் மருத்துவ சிகிச்சைக்காக காரில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்திசையில் வேகமாக வந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் கார் முழுமையாக நொறுங்கியது. காரை ஓட்டிச் சென்ற தம்பிராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடன் பயணித்த மூன்று பேரும் படுகாயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியகுளம் போலீசார், உயிரிழந்த தம்பிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததா அல்லது அதிவேகமாக வந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ சிகிச்சைக்காக சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b