Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 02 ஜூலை (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்க வேண்டிய தபால்களை விநியோகம் செய்யாமல் ஏழு மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த தபால்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளகோவில் தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு வந்த அரசு ஆவணங்கள், முக்கிய கடிதங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட தபால்களை உரியவர்களிடம் வழங்காமல் 4 ஆண்டுகளாக ஏழு மூட்டைகளில் மறைத்து வைத்திருந்தது துறை ரீதியான ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏழு மூட்டை தபால்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் பட்டாபிராமன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விநியோகம் செய்யப்படாமல் இருந்த அனைத்து தபால்களையும் உரிய பயனாளிகளிடம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / ANANDHAN