கல்லூரி மாணவி மீது தாக்குதல் விவகாரம் - 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கோவை, 02 ஜூலை (ஹி.ச.) கோவை மதுக்கரை அடுத்த வழுக்குப்பாறை பகுதியில் பேச மறுத்த 18 வயது கல்லூரி மாணவியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சூர்யா என்பவர் கடுமையாக தாக்கினார். இது குறித்து கேட்கச் சென்ற மாணவியின் தந்தை இளைஞர் சூர்யாவை தாக்கினார். சம்பவம்
Madhukarai Police Station


கோவை, 02 ஜூலை (ஹி.ச.)

கோவை மதுக்கரை அடுத்த வழுக்குப்பாறை பகுதியில் பேச மறுத்த 18 வயது கல்லூரி மாணவியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சூர்யா என்பவர் கடுமையாக தாக்கினார்.

இது குறித்து கேட்கச் சென்ற மாணவியின் தந்தை இளைஞர் சூர்யாவை தாக்கினார்.

சம்பவம் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றனர்.

அப்போது மாணவியின் வீட்டிற்கு வந்த இளைஞர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்தும் உள்ளே இருந்த பொருட்களை சூறையாடினர்.

இதுகுறித்து மாணவி மதுக்கரை போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் மாணவியை தாக்கிய சூர்யா (25), மணியரசு, நரேந்திரன் உள்ளிட்டோர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN