மேகதாது அணைக்கு எதிராக இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும் -அன்புமணி ராமதாஸ் அழைப்பு
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் ப
அன்புமணி


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 12,500 ஏக்கர் வனப்பகுதி மற்றும் விலங்குகள் சரணாலயங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், இது மிகப்பெரிய சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

சில அரசியல் கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அநீதிக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.

மேகதாது அணையைத் தடுப்போம்; காவிரியைக் காப்போம்; சூழலியல் பேரழிவைத் தடுக்க ஒன்றிணைவோம் என இளைஞர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P