மயில்சாமி அண்ணாதுரை
தமிழ்நாடு, 02 ஜூலை (ஹி.ச.) முனைவர் மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai) இந்தியாவின் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளரும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) முன்னாள் இயக்குநரும் ஆவார். இந்தியாவின் மிக முக்கியமான விண்வெளித் திட்டங்களான சந்தி
_


தமிழ்நாடு, 02 ஜூலை (ஹி.ச.)

முனைவர் மயில்சாமி அண்ணாதுரை (Mylswamy Annadurai) இந்தியாவின் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளரும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) முன்னாள் இயக்குநரும் ஆவார்.

இந்தியாவின் மிக முக்கியமான விண்வெளித் திட்டங்களான சந்திரயான்-1, சந்திரயான்-2 மற்றும் மங்கள்யான் ஆகிய திட்டங்களில் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

விண்வெளித் துறையில் இவரது அளப்பரிய பங்களிப்பிற்காக இவர் அன்போடு இந்தியாவின் நிலவு மனிதர் (Moon Man of India) என்று அழைக்கப்படுகிறார்.

தனது பொறியியல் படிப்பை முடித்தவுடன் இஸ்ரோ நிறுவனத்தில் இளநிலை ஆய்வாளராக 1982ஆம் ஆண்டு சேர்ந்தார்.

இவரது திறமையால் செயற்கைக்கோள் முடுக்கியை உருவாக்கும் அணியின் தலைவராக 1985ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் (Mars Orbiter Mission) திட்ட இயக்குநராகச் செயல்பட்டு, முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை எட்டிய உலகின் மிகக் குறைந்த செலவிலான விண்வெளித் திட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

இந்தியாவின் முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 திட்டத்தின் இயக்குநராகச் செயல்பட்டு, நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறியும் வரலாற்றுச் சாதனைக்கு வழிகாட்டினார்.

பிறகு செயற்கைக்கோள் விண்கலன் இயக்க மேலாளர் (1988), இன்சாட் துணை இயக்குநர் (1994), மேலும் இன்சாட்-2சி, இன்சாட்-2டி, இன்சாட்-3பி, ஜிசாட்-1 ஆகியவற்றின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.

2004ஆம் ஆண்டு சந்திரயான் திட்ட இயக்குநரானார்.

அதுமட்டுமல்லாது தொலையுணர்வு செயற்கைக்கோள், மங்கள்யான் போன்றவற்றின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் அஸ்ட் ரோசாட், ஆதித்யா-L1 செயற்கைக்கோள்களை வழிநடத்தியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தின் (முன்னாள் இஸ்ரோ செயற்கைக்கோள் மையம்) இயக்குநராக 2015 முதல் 2018 வரை பணியாற்றினார்.

இவர் பத்மஸ்ரீ, சந்திரயான் திட்டத்திற்காக 3 சர்வதேச விருதுகள், 4 விண்வெளி விருதுகள், பல்வேறு அமைப்புகளின் கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழகப் பள்ளிக்கல்வித்துறையின் 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்கும் உயர்மட்டக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் (NDRF) தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

விருதுகளும் அங்கீகாரங்களும்பத்மஸ்ரீ விருது:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆற்றிய சிறந்த சேவைக்காக இந்திய அரசு இவருக்கு 2016-இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இராஜ்யோத்சவ பிரசஸ்தி விருது:

கர்நாடக அரசிடமிருந்து 2008 ஆம் ஆண்டு இந்த விருதைப் பெற்றார்.

பாடநூல் அங்கீகாரம்:

இவரது விண்வெளிச் சாதனைகள் தமிழ்நாடு பள்ளிப் பாடப்புத்தகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / Durai.J