தவெகவின் நவீன வாஷிங் மெஷின் அரசியல் - ராஜீவ்காந்தி ராதாகிருஷ்ணன் விமர்சனம்
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றி கழகம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் அரசியலுக்கு வந்ததாகக் கூறியவர்
Rajiv Gandhi Radhakrishnan


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி ராதாகிருஷ்ணன்

தமிழக வெற்றி கழகம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில்,

ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் அரசியலுக்கு வந்ததாகக் கூறியவர்கள், இன்று ஊழல் குற்றச்சாட்டுகள், விசாரணைகள் மற்றும் வழக்குகளில் பெயர் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்களை தங்கள் சினிமா கம்பெனியில் இணைத்துக் கொள்வது என்ன அரசியல்?

நேற்று வரை ஊழலை எதிர்த்து பேசியவர்கள், இன்று புதிய “வாஷிங் மெஷின்” அரசியலை நடத்துகிறார்! ஒரு கட்சியில் இருந்தபோது ஊழல்வாதி என்று விமர்சிக்கப்பட்டவர்கள், இன்று உங்கள் சினிமா கம்பெனியில் இணைந்தவுடன் தூய்மையானவர்களாக மாறிவிடுகிறார்களா?

“நான் வந்தால் ஊழலை ஒழிப்பேன்” என்ற முழக்கம், இன்று “எங்களுடன் சேர்ந்தால் அனைத்தும் சுத்தம்” என்ற வாஷிங் மெஷின் அரசியலாக மாறிவிட்டதா?

ஊழலுக்கு எதிரான அரசியல் என்பது மேடைப் பேச்சால் அல்ல, கொள்கை நிலைப்பாட்டால் நிரூபிக்கப்பட வேண்டும்.

உங்கள் நவீன “வாஷிங் மெஷின் அரசியல்” வெல்லட்டும் நவீன வாஷிங் மெஷினின் தந்தையே என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN