இலங்கைக்கு கடத்த முற்பட்ட 46 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
ராமநாதபுரம், 02 ஜூலை (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா ,கடல்அட்டை, மஞ்சள், பீடியிலை போன்றவை தொடர்ந்து கடத்தி செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புது மாயாகுளம் கடற்கரை ப
Weed Sale Case


ராமநாதபுரம், 02 ஜூலை (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா ,கடல்அட்டை, மஞ்சள், பீடியிலை போன்றவை தொடர்ந்து கடத்தி செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புது மாயாகுளம் கடற்கரை பகுதி வழியாக படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்திச் செல்ல இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்த போது, இன்று அதிகாலை இருசக்கர வாகனங்களில் சென்ற மூன்று பேரை சோதனை செய்த போது அவர்களிடமிருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரை அருகே உள்ள மாயா குளத்தை சேர்ந்த ஜெசிர், முசாரப், கருணை முகமதுஅனஸ் ஆகிய மூன்று பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Hindusthan Samachar / ANANDHAN