சென்னையில் தூய்மைப் பணியாளர் திடீர் மரணம் - போலீசார் விசாரணை
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த 42 வயதான சத்யா என்பவர் இன்று காலை வழக்கம் போல் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மயங்கி சரிந்த அவரை,
சென்னையில் தூய்மைப் பணியாளர் திடீர் மரணம்: போலீசார் விசாரணை


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த 42 வயதான சத்யா என்பவர் இன்று காலை வழக்கம் போல் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மயங்கி சரிந்த அவரை, உடன் பணிபுரிந்தவர்கள் உடனடியாக மீட்டு முதலுதவி அளிக்க முயன்றனர்.

இருப்பினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாசாலை காவல் நிலைய போலீசார், சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சத்யாவுக்கு உடல்நலக் குறைபாடு இருந்ததா அல்லது பணிச்சுமை காரணமாக இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னரே உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் மரணம் சக ஊழியர்கள் மற்றும் வணிக வளாக பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்யாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்வதாகவும் போலீசார் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b