Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத், 02 ஜூலை (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அதிபத்லா பகுதியில் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இயங்கி வருகின்றது.
கவுரா (Goura) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நிறுவனத்தில் உள்ள இயந்திரத்தை இயக்கிய போது ஷாட் சர்கியூட் ஆகி, அதன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் நிறுவனத்தில் அதிக அளவில் ஊழியர்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரமாக போராடி பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b