காங்கிரஸ்–பிஆர்எஸ் மோதல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி போல – பண்டி சஞ்சய் குமார் விமர்சனம்
ஹைதராபாத் , 02 ஜூலை (ஹி.ச.) தெலங்கானாவில் குருகுல பள்ளிகளுக்கான டெண்டர் விவகாரம் மற்றும் மாநில கடன் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பிஆர்எஸ் இடையே கடும் அரசியல் மோதல் உருவாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த
A


ஹைதராபாத் , 02 ஜூலை (ஹி.ச.)

தெலங்கானாவில் குருகுல பள்ளிகளுக்கான டெண்டர் விவகாரம் மற்றும் மாநில கடன் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பிஆர்எஸ் இடையே கடும் அரசியல் மோதல் உருவாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பொதுவான விவாதத்திற்கு தயார் என கூறிய காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியான பிஆர்எஸுக்கு சவால் விடுத்தது.

இதனை ஏற்றுக்கொண்ட பிஆர்எஸ் தலைவர்கள் கன் பார்க் பகுதியில் நடைபெறும் பொதுச்சந்திப்பிற்கு செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து அரசியல் சூழ்நிலை மேலும் சூடுபிடித்த நிலையில், பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தனது அறிக்கையில் அவர் கூறுவது :

காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இடையிலான இந்த மோதல் “பிக் பாஸ்” நிகழ்ச்சி போல நாடகமாக நடைபெறுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளியில் இரு கட்சிகளும் மோதிக்கொள்வது போல காட்டினாலும், உள்ளுக்குள் இரண்டும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குருகுல டெண்டர், மாநில கடன் மற்றும் நிர்வாக தோல்வி குறித்த விவகாரங்களில் வெளிப்படையான விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தெலங்கானாவில் அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA