குதிரை பேரம் என்ற இழிவான வேலையை ஆரம்பித்து வைத்தது திமுக தான் - வைகோ
திருநெல்வேலி, 02 ஜூலை (ஹி.ச.) திருநெல்வேலியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முதலமைச்சரின் இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு வந்தால் பிரச்சாரம் செய்வதாக நான் கூறியதாக தொடர்ந்து குற்றம்
Vaiko


திருநெல்வேலி, 02 ஜூலை (ஹி.ச.)

திருநெல்வேலியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

முதலமைச்சரின் இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு வந்தால் பிரச்சாரம் செய்வதாக நான் கூறியதாக தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்கள் அது குறித்த கேள்விக்கு,

நேரம் வரும் பொழுது அதைப்பற்றி பரிசீலனை செய்கிறேன் என்றுதான் முதல்வர் கூறினார்.

இரண்டு எம்எல்ஏக்களை கண்டிப்பாக சூரியன் சின்னத்துடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது திமுக. எங்களுக்கு மட்டும் நான்கு சீட் என திமுக எங்களை நிர்பந்தப்படுத்தினார்கள்

ஸ்டாலின் முதலில் எங்கள் சின்னத்தில் நிற்க சரி என ஓகே சொன்னார். பிறகு அமைச்சர்கள் பிடிவாதம் பிடித்து சூரியனில் நிற்க வைத்தார்கள்.

குதிரை பேரம் நடைபெறுகிறது என பேசுகிறார்கள். குதிரை பேரம் என்ற இழிவான வேலையை ஆரம்பித்து வைத்தது திமுக தான்.

எங்களுடைய கம்பம் எம்எல்ஏவை ராஜினாமா செய்ய வைத்த திமுகவில் சேர்த்து இடைத்தேர்தலில் நிற்க வைத்தது பெருச்சாளி பேரமா?

அபாண்டமான ஆக்கிரமமான பலிகளை எங்கள் மீது சுமத்தி வருகிறார்கள். திமுக குடும்பம் தொடர்பான ஒரு பத்திரிகை பக்கம் பக்கமாக சேர்த்து வரித்துக் கொண்டிருக்கிறது

பத்திரிகையாளர்களை அதிகம் மதிக்கக் கூடியவன் நான்.

ஊழல் இல்லாத அரசாங்கம் நடத்த வேண்டும் என முதல்வர் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சராக விஜய் தான் இருப்பார். அடுத்த தேர்தலில் விஜய் தான் முதலமைச்சராக ஆவார்.

கட்சி ஆரம்பித்து பலரும் மூடிச் சென்று விட்டார்கள். நாங்கள் 32 ஆண்டுகளாக கட்சியை நடத்தி வருகிறோம்.

தமிழக வெற்றிக் கழகத்தையும் திராவிட இயக்கத்தின் ஒரு கூராகவே பார்க்கிறேன். விலகி சென்றவர்கள் எல்லாம் மீண்டும் வந்து சேர்கிறார்கள்.

நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக நேற்று பேசியிருக்கிறேன்

ஒவ்வொரு கட்சி வெளியேறியதற்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. எங்களை திமுகவினர் மோசமாக நடத்தினார்கள் அதனால் வெளியில் வந்து விட்டோம்.

சென்றவர்களை வசை பாடுவது என்னுடைய வழக்கமல்ல. சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வன் மற்றும் ராஜேந்திரன் வாழட்டும். அவர்கள் முதுகில் குத்தவில்லை. எனது நெஞ்சில் குத்தி விட்டார்கள்.

உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள் என்னோடு இருக்கிறார்கள். அவர்கள் கட்சியை காப்பாற்றுவார்கள். இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம்.

தமிழ்நாட்டிலேயே இதுவரை நடக்காத அரசியல் மோசடி நடக்க இருந்தது. எடப்பாடி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று எப்படி ஒரு முடிவு எடுத்தீர்கள். குட்டிகரணம் போட்டார்கள்.

ராஜ்யசபா சீட்டு கொடுத்தார்கள் அதற்கு நன்றி. விஜயிடம் ஒரு வசீகரம் இருக்கிறது. பெண்கள் ஆண்கள் இளைஞர்கள் அனைவருமே ஜெயித்தால் ஆதரிக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் சுயேட்சை சின்னத்திலும் நிற்கலாம். தீப்பெட்டியில் நிற்கலாம் பம்பர சின்னத்திலும் நிற்கலாம். திமுகவைப் போல நாங்கள் தற்பொழுது நடத்தப்பட மாட்டோம் என்று கூறுகிறேன்.

என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN