வேளாண்துறை அமைச்சர் வினோத் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்
திருவண்ணாமலை, 02 ஜூலை (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் திருவண
Minister Vinoth


திருவண்ணாமலை, 02 ஜூலை (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திருவண்ணாமலை வருகை தந்த வேளாண்மை துறை அமைச்சர் வினோத் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார், முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கி வழிபட்டவர்கள், தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை வழிபாடு செய்தனர், அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

முன்னதாக அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்த அமைச்சர் வினோத் கோவில் நடை 5 மணிக்கு திறக்கப்பட்டவுடன் கோ பூஜை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

பயிர்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்.

கரும்புக்கான ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்றும், வேளாண்மைக்கு என்று தனிப்பட்ட தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளின் கோரிக்கைகள் கேட்டு அறிந்து விவசாயிகள் பலனடையும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN