Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சூர், 02 ஜூலை (ஹி.ச.)
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் நிலைதடுமாறி சாலையோரத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டத்தின் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது தோழி மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்திசையில் வந்த பிக்கப் வேனுக்கு வழிவிட முயன்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமாகச் சென்று சாலையோர சுற்றுச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இரு பெண்கள் மற்றும் ஒன்றரை வயது குழந்தை காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பிக்கப் வேன் ஓட்டுநர் சாலையின் இடதுபுறமாக வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P