Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட இணைவு விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார்.
இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மாமல்லபுரம் நோக்கி வருகை தந்து வருகின்றனர்.
விழாவையொட்டி மேடை, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாமல்லபுரம் வந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
அதிகாலை 6 மணிக்கே மாமல்லபுரம் அதிரும் அளவிற்கு மக்கள் ஆர்வமாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இன்றைய இணைப்பு விழாவை மகிழ்ச்சியோடு தமிழகம் முழுவதும் உள்ள இணைந்துள்ள தொண்டர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்காகவும் இந்த இணைவு ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும், என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam