தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கம்- மாவட்டச் செயலாளர்கள் நியமனம்
சென்னை, 02 ஜூலை (ஹி.ச) தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கும், நிர்வாக வசதிகளை மேம்படுத்துவதற்கும், ஏற்கனவே சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் பிரிக்கப்பட்டிருந்த கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்ப
Tvk


சென்னை, 02 ஜூலை (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கும், நிர்வாக வசதிகளை மேம்படுத்துவதற்கும், ஏற்கனவே சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் பிரிக்கப்பட்டிருந்த கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் (உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி) மாவட்டச் செயலாளராக முனிரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம் (நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி) மாவட்டச் செயலாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மத்திய மாவட்டம் (பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி) மாவட்டச் செயலாளராக மரிய ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி வடக்கு மாவட்டம் (திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி) மாவட்டச் செயலாளராக ஆர்.எஸ். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம் (போளூர் சட்டமன்றத் தொகுதி) மாவட்டச் செயலாளராக அபிஷேக் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மாவட்டங்கள் மற்றும் அதற்கான நிர்வாகிகள் நியமனம் மூலம், கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தி, கழகப் பணிகளை விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ