த.வெ.க. குதிரை பேர அரசியலை ஒன்றிய அரசு விசாரிக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை, 02 ஜூலை (ஹி.ச.) புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, மாநில அரசின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: மதிமுக பொதுக்குழுவில், ம
அமைச்சர் ரகுபதி


புதுக்கோட்டை, 02 ஜூலை (ஹி.ச.)

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, மாநில அரசின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

மதிமுக பொதுக்குழுவில், மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய முதலமைச்சர் கூறியதாக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தும், அதுகுறித்து இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

கரூருக்கு செல்வதற்கு முன்பாகவே அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்ற எண்ணம் தோன்றுகிறது.

108 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) குதிரை பேர அரசியலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஒன்றிய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கும், குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான வழக்கும் முற்றிலும் வேறுபட்டவை. இரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியாது, என்று ரகுபதி தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam