பொள்ளாச்சியில் ஜூலை 12 ஆம் தேதி 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு - அண்ணாமலை அறிவிப்பு
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி ''வீ தி லீடர்ஸ்'' என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளார். புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது புதிய அமைப்பான ''வீ தி லீடர்ஸ்'' சார்
'We the Leaders' organization's first conference


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி 'வீ தி லீடர்ஸ்' என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள அண்ணாமலை, தனது புதிய அமைப்பான 'வீ தி லீடர்ஸ்' சார்பில் முதல் மாநாட்டை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

வரும் ஜூலை 12-ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இந்த பிரமாண்ட மாநாடு நடைபெறும் என அண்ணாமலை இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த அமைப்பின் கொள்கைகள், எதிர்கால செயல் திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து முதல் மாநாட்டில் விரிவாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சியில் நடைபெறும் இந்த மாநாடு, அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு தொடக்கமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மாநாடு 'போதை இல்லா பொள்ளாச்சி' மற்றும் 'போதை இல்லா தமிழகம்' என்ற முழக்கங்களை முதன்மைப்படுத்தி ஒரு பிரம்மாண்ட மக்கள் சந்திப்பாகவும், விழிப்புணர்வு பொதுக்கூட்டமாகவும் நடத்தப்பட உள்ளது.

போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகத் தன் அமைப்பில் உள்ள 19 லட்சம் உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, ஜூலை மாதம் முழுவதும் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

அண்ணாமலை விடுத்துள்ள அறிவிப்பின்படி, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பினர் வாரம் வாரமாகப் பின்வரும் களப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்:

பொள்ளாச்சி மாநாட்டைத் தொடர்ந்து, ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மற்றொரு பிரம்மாண்ட போதை எதிர்ப்புப் பொதுக்கூட்டமும், மக்கள் சந்திப்புப் போராட்டமும் நடத்தப்பட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தங்கள் அமைப்பின் நோக்கம் அரசியல் மாற்றத்தை அடிமட்டத்திலிருந்து தொடங்குவது என்பதால், இந்த மாநாடுகள் திருப்புமுனையாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b