அமைச்சர் சரத்குமாரை கண்டித்து போராட்டம் - திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
சென்னை, 02 ஜூலை (ஹி.ச.) தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் (IPL) போட்டியின் போது எடுக்கப்பட்ட இவரது பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர்
சென்னை


சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)

தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் (IPL) போட்டியின் போது எடுக்கப்பட்ட இவரது பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சனங்கள் எழுந்தன

இந்த நிலையில் அமைச்சர் சரத்குமாரின் செயல்பாடுகளைக் கண்டித்து நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார்.

அமைச்சர் சரத்குமாரின் சமீபத்திய கருத்துகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரளான திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி கூடியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் கூறி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உட்பட பல திமுக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.

இந்த வழக்குப்பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b