வனத்துறை கிடங்கில் இருந்த 55 சந்தன மரக்கட்டைகள் மாயம்
திருப்பத்தூர், 20 ஜூலை (ஹி.ச) திருப்பத்தூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக அம்மாவட்ட வனத்துறை கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த 55 சந்தன மரக்கட்டைக
வனத்துறை கிடங்கில் இருந்த 55 சந்தன மரக்கட்டைகள் மாயம்


திருப்பத்தூர், 20 ஜூலை (ஹி.ச)

திருப்பத்தூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக அம்மாவட்ட வனத்துறை கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த 55 சந்தன மரக்கட்டைகள் காணாமல் போயுள்ளதாக வனத்துறை தரப்பில் புகார் எழுந்துள்ளது.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகள் எப்படி மாயமானது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கிடங்கின் பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இருப்பு பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் உள்நபர்களுக்கு தொடர்பு உள்ளதா அல்லது பாதுகாப்பு குறைபாடு காரணமா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிடங்கு அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகள் மற்றும் சந்தன மரக்கட்டைகளின் இருப்புப் பதிவேட்டு ஆவணங்களை அதிகாரிகள் தீவிரமாக ஒப்பிட்டு ஆய்வு செய்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகள் தீவிர முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வனக் காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / vidya.b