Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 20 ஜூலை (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள திருமுருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வரும் 06.08.2026 (வியாழக்கிழமை) நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா வெளியிட்டுள்ள உத்தரவில், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 08.08.2026 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam